உலகக்கோப்பையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் விளாசிய ஷிகர் தவான்!

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து வரும் உலகக்கோப்பை லீக் போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் சதம் விளாசியுள்ளார்.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை லீக் போட்டி, லண்டனின் கென்னிங்ஸ்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் இருவரும் பொறுமையுடன் ஆட்டத்தை தொடங்கினர்.

அரைசதம் கடந்த ரோஹித் ஷர்மா 70 பந்துகளில் 57 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடிய ஷிகர் தவான், சர்வதேச போட்டிகளில் தனது 17வது சதத்தை எட்டினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers