இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியா எளிதாக ஜெயித்துவிடும்.. இந்திய ரசிகர்களை கோபமடைய செய்த ஜாம்பவான்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இந்திய அணி இன்றைய போட்டியில் தோற்றுவிடும் என மறைமுகமாக கூறிய முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகனை ரசிகர்கள் டுவிட்டரில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் பலப்பரிட்சை நடத்துகிறது.

இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகள் என்பதால் இன்றைய போட்டி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து அணி முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில், இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியா எளிதாக வென்றுவிடும் என பதிவிட்டுள்ளார்.

அதாவது இந்தியா தோற்றுவிடும் என கூறியுள்ளார்.

இது இந்திய ரசிகர்களை கோபப்படுத்தியுள்ள நிலையில் அவரை வறுத்தெடுத்து வருவதோடு, வாகனுக்கு எதிராக மீம்ஸ் உருவாக்கி கிண்டலடித்து வருகிறார்கள்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்