ஆப்கானிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரத்தை தாக்கிய புயல்வேகப் பந்து! கவலையில் அணி வீரர்கள்

Report Print Kabilan in கிரிக்கெட்

ஆப்கானிஸ்தான் அணி வீரர் ரஷீத் கான் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நேற்று நடந்தது. முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 41.1 ஒவரில் 172 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதன் பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி, 32.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

முன்னதாக, ஆப்கானிஸ்தான் அணி விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்தபோது, இளம் வீரர் ரஷீத் கான் களமிறங்கினார். அவர் அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பெர்குசன் வீசிய பந்து ரஷீத் கானின் தலையை பலமாக தாக்கியது. அத்துடன் ஸ்டெம்பில் பட்டு விக்கெட்டும் ஆனது. பந்து தாக்கியதில் நிலைகுலைந்த ரஷீத் கான், தலையைப் பிடித்துக்கொண்டு பெவிலியனுக்கு திரும்பினார்.

அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். பந்தின் தாக்கத்தால் ரஷீத்திற்கு தலைவலி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மொத்தமாக அவருக்கு இரண்டு முறை லேசாக மயக்கம் வந்துள்ளது.

Getty Images

ஆனால், அதிலிருந்து இரண்டு முறை அவர் மீண்டு வந்துள்ளார். எனினும் தற்போது அவரை மருத்துவர்கள் சோதனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக அடுத்த போட்டியில் களமிறங்க அவர் தனது உடல்தகுதி நிரூபிக்க வேண்டும்.

நட்சத்திர வீரரான ரஷீத் கான் காயமடைந்துள்ளது, அந்நாட்டு அணி வீரர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்