அம்பையரை முட்டி தள்ளிய இங்கிலாந்து நட்சத்திர வீரர்

Report Print Basu in கிரிக்கெட்

உலகக் கோப்பையில் நேற்று கார்டிஃப் மைதானத்தில் நடந்த போட்டியின் போது இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜேசன் ராய், அம்பையரை முட்டி தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

யூன் 8ம் திகதி கார்டிஃப் மைதானத்தில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 107 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து துடுப்பெடுத்தாடியது. 26 ஒவரை வங்க தேச வீரர் முஸ்தபிசூர் வீச ஜோசன் ராய் துடுப்பாடினார். 96 ஓட்டங்களில் இருந்த ராய், பந்தை பவுண்டரிக்கு விளாசினார்.

அப்போது, பந்தை பார்த்துக்கொண்டே ஓடி வந்த ராய், எதிர்பாராத விதமாக அம்பையர் ஜோயல் வில்சன் மீது மோதி கீழே தள்ளினார். பின்னர், அவரே அம்பையரை தூக்கி விட்டார்.

ராயின் சதத்தை பாராட்ட உற்சாகத்துடன் எழுந்த ஆடை மாற்றம் அறையில் இருந்த இங்கிலாந்து வீரர்கள் இந்த காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், ராயை பாராட்டும் விதமாக கைதட்டினர். தொடர்ந்து விளையாடி ராய் 121 பந்துகளில் 153 ஓட்டங்கள் குவித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers