டிவில்லியர்ஸ் இருந்திருந்தால் வெற்றி பெற்றிருப்போமா? யாரும் இங்கு இறந்து விடவில்லை! கொந்தளித்த பயிற்சியாளர்

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், அணியின் பயிற்சியாளர் விமர்சனங்கள் குறித்து கொந்தளித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் ஓய்வு அறிவித்ததைத் தொடர்ந்து, அவருக்கான இடத்தை யாரும் இதுவரை நிரப்பவில்லை. இதனால் அந்த அணி தடுமாற்றங்களை சந்தித்து வருகிறது.

12வது உலகக்கோப்பையில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா தோல்வியை சந்தித்துள்ளது. அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸை அணியை எதிர்கொள்ள நிலையில், டி வில்லியர்ஸ் அணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்று பரவலாக பேச்சு எழுந்துள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன் கூறுகையில், ‘நான் நினைக்கிறேன் டிவில்லியர்ஸைக் காட்டிலும், அவர் அணிக்கு வர வேண்டும் என்று இங்கு உள்ளவர்கள் பலரும் நினைக்கின்றனர் என்று. அவர் விரும்பியிருந்தால் அவர் இங்கு இருந்திருப்பார்.

Sydney Sheshibedi/Gallo Images

நாம் இதைத்தான் நாள் முழுவதும் பேசிக்கொண்டிருக்கப் போகிறோமா? அல்லது வெஸ்ட் இண்டீஸ் போட்டிக்குத் தயாராகப் போகிறோமா? இது ஏதோ நீதிமன்ற வழக்கு போலல்லவா இருக்கிறது. ஓய்வு பெற்ற ஒருவரை அணியில் மீண்டும் தெரிவு செய்ததாக என் சமீப கால விளையாட்டு நினைவுகளில் இல்லை.

யாரும் ஆடிப்போய்விடவில்லை. யாரும் இறந்து விடவில்லை. தென் ஆப்பிரிக்காவில் நாங்கள் விளையாடிய போது, 10 போட்டிகளில் 8யில் வென்றோம். அப்போது இந்தக் கேள்வியையெல்லாம் யாருமே கேட்கவில்லையே ஏன்?

டிவில்லியர்ஸ் இடத்தில் எடுக்கப்பட்ட வீரர் தன் இடத்திற்கு தான் தகுதியானவர் தான் என்பதை நிரூபிக்க வேண்டும். நாம் தான் பார்வைகளை மாற்ற வேண்டும். ஏ.பி.டிவில்லியர்ஸ் பற்றி நாம் விரும்பியதைப் பேசிக் கொண்டிருக்கலாம்.

ஆனால், அவரால் நமக்கு உதவ முடியாது. நமக்கு நாமே உதவிதான் சாத்தியம். இது எங்களை பாதிக்கப்போவதில்லை. ஆனால் நாங்கள் இன்னும் சரியாகவும் விளையாட ஆரம்பிக்கவில்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்