உலகக்கோப்பை 2019... ஸ்டம்பில் பட்டு சிக்ஸர் பறந்த பந்து! வங்கதேச வீரரை மிரளவைத்த ஆர்ச்சர் பவுலிங் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் ஆர்ச்சர் வீசிய பந்தில் செளமியா சர்கார் போல்டானா நிலையில், பந்து சிக்ஸரில் விழுந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலககோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின, ஏற்கனவே உலகக்கோப்பை தொடர்களில் வங்கதேச அணியிடம் இங்கிலாந்து தோல்வியடைந்துள்ளதால், அதை எல்லாம் ஒட்டு மொத்தமாக இந்த போட்டியில் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன் படியே நேற்று இங்கிலாந்து அணி, 107 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இருப்பினும் இந்த வெற்றியையும் தாண்டி ஆர்ச்சர், வங்கதேச வீரர் செளமியா சர்காரை போல்டாக்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஏனெனில், ஆட்டத்தின் 4-வது ஓவரை ஆர்ச்சர் வீசினார். அதில் 2-வது பந்தை செளமியார் சர்கார் தடுத்து ஆட முயற்சிக்க, ஆனால் பந்தானது ஸ்டம்பின் பைசில் பட்டு சிக்ஸர் சென்றது. சாதரணமாக பேட்டில் பட்டு தான் சிக்ஸர் செல்லும், ஆனால் நேற்று அவுட்டாக்கிய பின்பும், பந்தானது சிக்ஸருக்கு பறந்தது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்