இந்தியாவின் பயிற்சி பாதிப்பு: அவுஸ்திரேலியா உடனான போட்டி நடக்குமா? காரணம் இது தான்

Report Print Basu in கிரிக்கெட்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கவிருக்கும் போட்டியில் அவுஸ்திரேலியா-இந்தியா அணிகள் மோதவுள்ளன.

சௌதாம்டன் மைதானத்தில் தென் ஆப்பரிக்கா அணியை வீழ்த்திய இந்திய அணி வீரர்கள், அவுஸ்திரேலியாவுடன் விளையாட லண்டன் ஓவல் மைதானம் வந்தடைந்துள்ளனர்.

லண்டனில் மழை பொழிந்து வருவதால், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சரியாக பயிற்சி எடுக்க முடியவில்லை. மழையின் காரணமாக வீரர்கள் விரைவில் மைதானத்தில் இருந்து புறப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து மழை பொழிந்து வருவதால் ஞாயிற்றுக்கிழமை போட்டி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், இந்த நேரத்தில் மழை பெய்வது வழக்கம் தான். ஆனால், ஞாயிற்றுக்கிழமை லேசான வெயில் அடிக்கும், மழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை முன்னறிவிப்பு தெரிவித்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்