மழையால் ரத்தானது இலங்கை - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதவிருந்த கிரிக்கெட் போட்டியானது ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலகக்கிண்ணம் தொடரின் 11வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவிருந்தன.

இந்த போட்டி பிரிஸ்டல் மைதானத்தில் நடக்கவிருந்த நிலையில் மாலை வரை மழை பெய்ததால், போட்டி துவங்குவதற்கு தாமதமானது.

50 ஓவர்கள் கொண்ட போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்பட்டு இரவு 8:49 மணிக்கு துவங்குவதாக இருந்தது. ஆனால் மைதானத்தின் ஈரப்பதம் காயாமல் இருந்ததால், டாஸ் போடாமலேயே போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது,

மேலும் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் மைதானத்தில் விட்டு வெளியேறினர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers