ஒட்டுமொத்த மைதானமும் எழுந்து நின்று கைதட்டிய கேட்ச்! வைரலாகும் வெஸ்ட் இண்டீஸ் வீரரின் வீடியோ

Report Print Kabilan in கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஷெல்டன் கோட்ரெல் பிடித்த கேட்ச், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சவுதம்டானில் நடந்த உலகக்கோப்பை லீக் போட்டியில், நேற்றைய தினம் அவுஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி கொல்டர் நைல்(92), ஸ்மித்(73) ஆகியோரின் உதவியுடன் 288 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 273 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆகி தோல்வியுற்றது. அதிகபட்சமாக ஹோப் 68 ஓட்டங்களும், ஹோல்டர் 51 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்தப் போட்டியில், அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டம் செய்துகொண்டிருந்தபோது, ஸ்டீவ் ஸ்மித் அடித்த ஷாட்டை வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷெல்டன் கோட்ரெல் அபாரமாக கேட்ச் பிடித்து அசத்தினார்.

சிக்ஸ் போக வேண்டிய பந்தை கையால் தடுத்த ஷெல்டன், பின்னர் தடுத்த வேகத்திலேயே பவுண்டரி எல்லைக்கு சென்று திரும்பி கேட்ச் செய்தார்.

இதனைக் கண்டு ஸ்மித் அதிர்ச்சியடைந்த நிலையில், அப்போது மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்கள் பலரும் எழுந்து நின்று, கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்