வரலாற்றை மாற்றியமைக்க இலங்கை அணிக்கு இன்று சூப்பர் வாய்ப்பு! எப்படி தெரியுமா?

Report Print Raju Raju in கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை இதுவரை தோற்கடித்ததில்லை என்ற வரலாற்றை மாற்றும் முனைப்புடன் இன்று அந்த அணியுடன் இலங்கை மோதுகிறது.

12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பிரிஸ்டலில் இன்று நடக்கும் 11-வது லீக் ஆட்டத்தில் ஆசிய அணிகளான பாகிஸ்தானும், இலங்கையும் மல்லுகட்டுகின்றன.

இந்த உலககோப்பையை பொருத்தவரையில் பாகிஸ்தான் அணி தனது தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் படுதோல்வியடைந்தது.

அதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிராக விசுவரூபம் எடுத்த பாகிஸ்தான் 348 ரன்கள் குவித்ததோடு, வெற்றியையும் வசப்படுத்தியது. அதே போல இலங்கை அணியும் தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 136 ரன்னில் சுருண்டு படுதோல்வியை சந்தித்தது.

அடுத்த ஆட்டத்தில் மழை பாதிப்புக்கு மத்தியில் ஆப்கானிஸ்தானை 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி இதுவரை இலங்கையிடம் தோற்றதில்லை. அந்த அணிக்கு எதிரான 7 ஆட்டங்களிலும் பாகிஸ்தானே வாகை சூடியிருக்கிறது.

அந்த சிறப்பு இந்த உலக கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு தொடருமா? அல்லது இலங்கை வீரர்கள் மோசமான சரித்திரத்தை மாற்றிக் காட்டுவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்