உலகக் கோப்பையில் புதிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்தார் லசித் மலிங்கா

Report Print Basu in கிரிக்கெட்

உலகக் கோப்பை தொடரில் இலங்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, புதிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார். உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில், மலிங்கா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய மலிங்கா, உலகக் கோப்பை தொடரில் இதுவரை 24 போட்டிகளில் விளையாடி 46 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில், இந்திய வீரர்களான சஹீர் கான் மற்றும் ஜவஹல் ஸ்ரீநாத் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி 5வது இடத்தைப் பிடித்தார் மலிங்கா.

இம்முறை உலகக் கோப்பையில் குறைந்தபட்சம் 10 அல்லது 15 விக்கெட்டுக்களை மலிங்கா கைப்பற்றினால், பாகிஸ்தான் வீரர் வசீம் அக்ரமின் 3ஆவது இடத்தைக் கைப்பற்றுவதற்கான அரிய வாய்ப்பு அவருக்கு கிடைக்கும்.

இதேவேளை, உலகக் கோப்பை போட்டிகள் வரலாற்றில் அதிகளவு விக்கெட்டுக்களை வீழ்த்திய வீர்ரகளுக்கான பட்டியலில் கிளென் மெக்ராத் (71), முத்தையா முரளிதரன் (68), வசீம் அக்ரம் (55), சமிந்த வாஸ் (49) ஆகிய வீரர்கள் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers