நான் பார்த்ததிலேயே உடற்தகுதி இல்லாத ஒரே கேப்டன் இவர்தான்! மோசமாக விமர்சித்த வேகப்புயல்

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சர்பிராஸ் அகமதுவை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் மோசமாக விமர்சித்துள்ளார்.

இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ட்ரெண்ட் பிரிட்ஜில் நடந்த லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்-பாகிஸ்தான் அணிகள் மோதின. பாகிஸ்தான் அணி முதலில் ஆடி 105 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 14வது ஓவரிலேயே வெற்றி பெற்றது. பாகிஸ்தானின் இந்த தோல்வி அந்த நாட்டு ரசிகர்களை மட்டுமல்லாமல், முன்னாள் வீரர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

AFP

இந்தப் போட்டிக்குப் பிறகு, ‘பேச்சற்று இருக்கிறேன்’ என்று அந்நாட்டு அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் ட்வீட் செய்தார். மேலும், இந்தப் போட்டி முடிந்துவிட்டது. வீரர்களை குறை கூறாமல், நம் நாட்டுக்காக விளையாடும் இவர்களுக்குத்தான், உலகக்கோப்பை முழுவதும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் ட்வீட் செய்தார்.

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து அக்தர் கூறுகையில், ‘சர்பிராஸ் அகமது, நாணயத்தை சுழற்ற வரும்போது தொப்பையுடன் நின்றிருந்தார். அவர் முகம் குண்டாக இருந்தது. நான் பார்த்தவரை உடல் தகுதி இல்லாத முதல் கேப்டன் அவராகத்தான் இருப்பார்.

அவரால் அங்கும், இங்கும் நகர கூட முடியாது. விக்கெட் கீப்பிங் பணியிலும் அவர் தடுமாறி வருகிறார்’ என தெரிவித்துள்ளார். சோயிப் அக்தரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers