பிரித்தானிய மகராணியை பார்க்க சென்ற போது ஏன் அப்படி உடை அணிந்திருந்தேன்? பாகிஸ்தான் வீரர் விளக்கம்

Report Print Santhan in கிரிக்கெட்

பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்த போது ஏன் பாரம்பரிய உடை அணிந்து சென்றேன் என்பது குறித்து பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பிராஸ் அகமது விளக்கமளித்துள்ளார்.

இங்கிலாந்தில் 12-வது உலகக்கோப்பை போட்டி கோலகலமாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவு அணியும் வெற்றி பெற்றுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. அதில் முதல் போட்டியில் நியூசிலாந்து-இலங்கையும், அடுத்தபடியாக ஆப்கானிஸ்தான்-அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் தொடர் துவங்குவதற்கு முன்பு உலகக்கோப்பை அணியின் தலைவர்கள், பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து பேசினர். அப்போது பாகிஸ்தான் அணியின் தலைவரான சர்பிராஸ் அகமது மட்டும் மற்ற வீரர்களைப் போன்று கோர்ட்-போண்ட் போடாமல் அவர்களின் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தார்.

இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மட்டும் எப்படி இது போன்ற உடை அணிந்து செல்லலாம் என்ற கேள்வியும் எழுந்தது.

இது குறித்து சர்பிராஸ் அகமது அளித்துள்ள விளக்கத்தில், நான் அணிந்திருந்த உடை சல்வார் கமீஸ், அது எங்களின் தேசிய உடை, அதுமட்டுமின்றி எங்களுடைய கிரிக்கெட் போர்டு ஏதேனும் நிகழ்ச்சி ஒன்றிற்கு செல்லும் போது பாரம்பரிய உடை அணிந்து செல்லும் படி கூறியிருந்தது.

இதனால் சல்வார் கமீஸ் அணிந்திருந்தேன். மற்ற அணியின் தலைவர்கள் எல்லாம் கோர்ட்-பேண்ட் அணிந்திருக்கும் போது, நான் மட்டும் என்னுடைய நாட்டின் பாரம்பரிய உடை அணிந்திருந்தது பெருமையாகவே உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் கடந்த 1979-ஆம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த டாக்டர் Abdus Salam-க்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது, அப்போது அவர் பாகிஸ்தானின் பாரம்பரிய உடை அணிந்து சென்று நோபல் பரிசு வாங்கியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்