பாகிஸ்தானை 105 ஓட்டங்களில் சுருட்டிய வெஸ்ட் இண்டீஸ்!

Report Print Kabilan in கிரிக்கெட்

நாட்டிங்காமில் நடந்து வரும் உலகக்கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 105 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வருகின்றன. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தாமஸ், ஹோல்டரின் மிரட்டலான பந்துவீச்சில் 21.4 ஓவரில் 105 ஓட்டங்களுக்கு பாகிஸ்தான் அணி சுருண்டது.

அந்த அணியில் அதிகபட்சமாக பாபர் அசாம், பக்ஹர் ஜமான் இருவரும் 22 ஓட்டங்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் தாமஸ் 4 விக்கெட்டுகளும், ஹோல்டர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers