3டி வீரரா நான்? ராயுடுவின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த தமிழக வீரர் விஜய்சங்கர்!

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடுவின் விமர்சனத்திற்கு, ஆல்-ரவுண்டர் வீரர் விஜய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அம்பத்தி ராயுடு இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக தமிழக வீரர் விஜய்சங்கர் அணியில் இடம்பிடித்தார்.

அதனைத் தொடர்ந்து, விஜய்சங்கரை விமர்சிக்கும் வகையில் 3டி கண்ணாடி வீரர் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். அவரது விமர்சனத்திற்கு பல தரப்பில் இருந்தும் கண்டங்கள் எழுந்தன.

இந்நிலையில், அம்பத்தி ராயுடுவின் விமர்சனத்திற்கு விஜய்சங்கர் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஒரு வீரர் பெரிதும் எதிர்பார்த்திருந்த அணியில் தெரிவு பெறவில்லை என்றால், அவரது மனது எந்தளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கும் என்று எனக்கு தெரியும்.

நானும் அதனை உணர்ந்திருக்கிறேன். ராயுடு என்னை மனதில் வைத்து கொண்டு அப்படி கூறி இருக்கமாட்டார். என் மீது அப்படி ஒரு விமர்சனம் வைத்தாலும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை.

நான் இந்திய அணிக்காக விளையாடுகிறேன். அதற்காக முழுவீச்சில் பயிற்சியில் ஈடுபட்டு, முழு திறனுடன் விளையாட வேண்டும். அதில் நான் முழு கவனம் செலுத்தி வருகிறேன். அதில் இருந்து எனது கவனம் சிதறாது’ என தெரிவித்துள்ளார்.

Hagen Hopkins/AFP/Getty Images

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers