உலகக்கோப்பையில் டோனி எடுத்த புதிய அவதாரம்... அசந்து போன ரசிகர்கள்; அரிதான காட்சி

Report Print Basu in கிரிக்கெட்

கிரிக்கெட் உலகில் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான இந்திய நட்சத்திர வீரர் டோனி, நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

லண்டன், ஓவல் மைதானத்தில் நடந்த நியூசிலாந்திற்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 179 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து, இந்திய அணி பந்து வீசிய நிலையில், டோனி சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

டோனிக்கு பதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் செயல்பட்டார். பின்னர், களமிறங்கிய டோனி பவுண்டரி கோட்டிற்கு அருகே பீல்டிங் செய்தார்.

டோனியை அணித்தலைராக, அதிரடி ஆட்டகாரராக, விக்கெட் கீப்பராக பார்த்து வந்த ரசிகர்களுக்கு இது அரிதான காட்சியாக அமைந்தது. டோனி இந்திய அணியில் விளையாடிய ஆரம்ப காலத்தில் பீல்டிங் செய்துள்ளார். இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு பின்னர், சர்வதேச போட்டியில் அவர் மீண்டும் பீல்டிங் செய்து காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers