பாகிஸ்தான் வீரர்களுக்கு திடீர் தடை விதித்த கிரிக்கெட் வாரியம்!

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினரை தங்களுடன் இங்கிலாந்து அழைத்துச் செல்ல, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திடீர் தடை விதித்துள்ளது.

இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ஆம் திகதி தொடங்குகிறது. இந்த தொடருக்கு முன்பாக நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாளை தொடரை பாகிஸ்தான் முழுவதுமாக இழந்தது.

இந்த தொடர் நடக்கும்போது, பாகிஸ்தான் அணி வீரர்கள் தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினரை தங்களுடன் அழைத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது வீரர்கள் தங்களது மனைவி மற்றும் குடும்பத்தினரை தங்களுடன் தங்க வைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வாரியம் தடை விதித்துள்ளது.

மேலும், தங்களுடன் தங்க வைக்க வேண்டும் என்றால் தனிப்பட்ட முறையில், அவர்கள் தங்க வைத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. எனினும், அதற்கான செலவு உள்ளிட்ட விடயங்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பொறுப்பாகாது என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நடுவரிசை துடுப்பாட்ட வீரர் ஹரிஸ் சோகைலுக்கு மட்டும், தனிப்பட்ட காரணங்களுக்காக தனது குடும்பத்தினரை உடன் அழைத்துச் செல்ல சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers