நுவான் பிரதீப் அசத்தல் பந்துவீச்சு: தொடரை கைப்பற்றியது இலங்கை அணி

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

ஸ்காட்லாந்து அணிக்கெதிரான 2வது போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

இலங்கை அணியானது ஸ்கட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் 18ம் திகதி நடக்கவிருந்த முதல் ஒருநாள் போட்டியானது மழையின் காரணமாக டாஸ் போடுவதற்கு முன்பு நிறுத்தப்பட்டது.

2வது ஒருநாள் போட்டியானது எடின்பர்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 322 ரன்களை குவித்தது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக துவக்க ஆட்டக்கார்களாக களமிறங்கிய டிமுத் கருணாரட்னே 77 ரன்களும், அவஷ்கா பெர்னாண்டோ 74 ரன்களும் குவிந்திருந்தனர்.

ஸ்காட்லாந்து அணி சார்பில் பிராட்லி வீல் 3 விக்கெட்டுகளையும், சப்யான் ஷெரீஃப் 2 விக்கெட்டுகளையும், டாம் சோலே, மார்க் வாட், மைக்கேல் லெஸ்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி வீரர்களுக்கு துவக்கம் சரியாக அமைந்தாலும், அடுத்தடுத்து வந்த வீரர்கள் பொறுப்புடன் விளையாட தவறியதால், 199 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தனர்.

இலங்கை அணியில் அதிகபட்சமாக நுவான் பிரதீப் 4 விக்கெட்டுகளையும், சுரகுங்கா லக்மால் 2 விக்கெட்டுகளையும், திசரா பெரேரா, இஸ்ரு உடானா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்கிற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers