விமானத்திலிருந்து அதிரடியாக இறக்கி விடப்பட்ட அவுஸ்திரேலியா முன்னாள் வீரர்: காரணம் இது தான்

Report Print Basu in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான மைக்கேல் ஸ்லாடர் விமானத்திலிருந்து அதிரடியாக இறக்கி விடப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் இருந்து வாஹா வாஹா நகருக்கு விமானம் பயணிக்கவிருந்த விமானத்தில் ஆஸி. முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லாட்டர் பயணித்துள்ளார். அப்போது அவருக்கும், மற்ற இரு பெண் பயணிகளுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, விமான குழுவினர் தலையிட உடனே கழிவறைக்கு சென்று பூட்டிக்கொண்ட ஸ்லாட்டர் நீண்டநேரமாகியும் வரவில்லை, விமான ஊழியர்கள் ஸ்லாட்டரை வெளியே வரக்கூறியபோதும் அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து, பொலிசாரை அழைத்த விமான ஊழியர்கள் ஸ்லாட்டரை விமானத்திலிருந்து வெளியேற்றியுள்ளனர்.

இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டியில் ஸ்லாட்டர் வர்ணனையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து ஸ்லாட்டர் கூறுகையில், நான் எந்த பயணிகளுடன் வாக்குவாதம் செய்யவில்லை. ஆனால், என்னால் விமானப்பயணம் தாமதமாகி இருந்தால், அதற்கு மன்னிப்பு கோருகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers