டோனியை அடிச்சிக்க ஆளே இல்லை.. ரவி சாஸ்திரி என்ன சொன்னார் தெரியுமா?

Report Print Basu in கிரிக்கெட்

எதிர்வரும் ஐசிசி உலகக்கோப்பையில் டோனி மிக சிறப்பாக செயல்படுவார் என தான் நம்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையில் பங்கேற்க்க இந்திய அணி இங்கிலாந்து செல்லவுள்ள நிலையில், இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.

அப்போது பேசிய ரவி சாஸ்திரி, உலகக் கோப்பையில் டோனி மிக சிறப்பாக செயல்படுவார். ஒரு நாள் போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் முடிவெடுப்பதில் டோனி மிஞ்ச ஆளே கிடையாது என தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பையில் போட்டிகளுக்கு இடையே நல்ல இடைவெளி உள்ளது. கடினமான போட்டிகளை முன்னரே விளையாடுவதன் மூலம் நாங்கள் ஆரம்பம் முதலே புள்ளிப்பட்டியலில் மேலே இருப்போம். களமிறங்கும் போது 100 சதவீத உறுதியுடன் இருப்போம். உலகக்கோப்பை என்று வரும் போது ஓய்வு, மெத்தனம் என்ற பேச்சுக்கே இடமில்லை என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers