என்ன ஆனாலும் டோனி கூறினால் கேட்போம்! இந்திய வீரர் சாஹல்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல், என்ன ஆனாலும் டோனி கூறினால் கேட்போம் என்று தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ள இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களில் சாஹலும் ஒருவர். சில நேரங்களில் மிரட்டலாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தக் கூடியவர் என்பதால் இவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இவருடன் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில், அவருடன் இணைந்து விளையாடுவது குறித்து சாஹல் கூறுகையில்,

‘நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்துள்ளோம். நாங்கள் அனைத்து நிலையிலும் அதை கடைபிடித்து வருகிறோம். ஆட்டத்தின் போக்கை புரிந்துகொண்டு, அதற்கேற்றது போல நாங்கள் எதாவது செய்வோம். எங்களின் போக்கை நாங்கள் மாற்றிக்கொள்ள போவதில்லை.

குல்தீப் எனது தம்பி போன்றவர். நாம் வீழ்ச்சி அடையும் போது சிலரிடம் மனம் விட்டு பேச நினைப்போம். அப்போது நான் குல்தீப்பிடம் பேசுவேன். நான் கடினமான சூழ்நிலைகளை சந்திக்கும்போது அவர் என்னிடம் பேசுவார்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் டோனி குறித்த கேள்விக்கு பதிலளித்த சாஹல், ‘என்ன ஆனாலும் மஹி பாய்(டோனி) சொன்னால் அதை நாங்கள் கேட்போம். நாங்கள் தவறாக செல்லும்போது, அவர் எங்களை வழி நடத்துவார்.

நாங்கள் அறிமுகமான முதல் போட்டியில் டோனியின் பேச்சை எப்படி கேட்டோமோ அது இன்றும் மாறவில்லை. நாங்கள் சுயமாக ஏதேனும் திட்டம் தீட்டினால் அதை டோனியிடம் பகிர்ந்துகொள்வோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers