பாகிஸ்தான் வீரர் அப்ரிடியின் ஆணவப் பேச்சை அடக்கிய சச்சின்... 2011 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடந்தது என்ன?

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் முடிந்து இப்போது கிரிக்கெட் ரசிகர்களுக்கு உலகக்கோப்பை ஒரு விருந்தாக வரவுள்ளது.

இதற்காக ஒவ்வொரு அணியும், வலுவான அணியை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த முறை, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அதிகம் வாய்ப்பிருப்பதாக முன்னணி வீரர்கள் பலரும் கணித்து கூறுகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் அப்போதைய பாகிஸ்தான் அணியின் தலைவர் அப்ரிடி அதிகம் பேசி, தோல்வியை சந்தித்ததைப் பார்ப்போம்.

எப்போது உலகக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றாலே ஒரு பரபரப்பு இருக்கும், ஆனால் ஒவ்வொரு முறை மோதும் போது, பாகிஸ்தான் அணியில் இருக்கும் வீரர்களில் யாரேனும் கண்டிப்பாக இந்த முறை இந்திய அணியை வீழ்த்துவோம் என்று சபதம் எடுப்பர், ஆனால் கடைசியில் தோல்வியை தான் சந்திப்பர்.

அந்த வகையில் கடந்த 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு முன்பு அப்போது தலைவராக இருந்த அப்ரிடி பத்திரிக்கையாளர் சந்திப்பில், உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவை கண்டிப்பாக வென்றே தீருவோம்.

அதற்கான வலிமையான வீரர்கள், ஆபத்தான பேட்ஸ்மேன்களை வைத்திருக்கிறோம். இந்தியாவுக்கு வந்து இந்தியாவை தோற்கடிப்பது, அதிலும் பைனலில் இந்தியாவை தோற்கடிப்பதுதான் எங்கள் இலக்கு. ஆனால், அரையிறுதியில் இந்தியாவை சந்திக்க வேண்டியதாயிற்று என்று சற்று ஆணவமாகவே பேசினார்.

அவரின் இந்த பேச்சுக்கு இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய பேட்டிங்கின் மூலம் பதிலடி கொடுத்தார். அவர் அடித்த 85 ஓட்டங்கள் தான் அன்றைய போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 260 ஓட்டங்களும், அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 231 ஓட்டங்கள் எடுத்து 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers