உண்மை கசக்கத்தான் செய்யும்! அணியில் நீக்கப்பட்ட பாகிஸ்தான் வீரரின் கோபமான ட்வீட்

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து திடீரென்று நீக்கப்பட்டதால், கோபமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான், தனது வாயைக் கட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் தொடங்க உள்ள உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் சில வீரர்கள் மாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக உத்தேச அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான், ஆல்-ரவுண்டர் பஹீம் அஷ்ரப், அபித் அலி ஆகியோர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

மாறாக வேகப்பந்து வீச்சாளர்களான வஹாப் ரியாஸ், முகமது ஆமிர் மற்றும் துடுப்பாட்ட வீரர் ஆசிப் அலி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் அதிர்ச்சியடைந்தார்.

அதனைத் தொடந்து, தனது கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக, வாயில் பிளாஸ்திரியால் ஒட்டி புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ‘நான் எதையும் கூற விரும்பவில்லை. உண்மை எப்போதும் கசக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ட்வீட்டுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் ஜுனைத் கான் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers