கேப்டன் என்றும் பாராமல் கோஹ்லியை கலாய்த்த யுவராஜ்.. வைரலாகும் புகைப்படம்

Report Print Basu in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை தலைமை தாங்கி வழிநடத்தவுள்ள அணித்தலைவர் கோஹ்லியை, இந்திய கிரிக்கெட வீரர் யுவராஜ் சிங் கலாய்த்துள்ளார்.

வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள விராட் கோஹ்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, இது எந்த நகரம் என கண்டுபிடிக்க முடியுமா என பதிவிட்டிருந்தார்.

அது இந்தியாவிலுள்ள நகரம் இல்லை என நன்றாக தெரிகிறது. ஆனாலும், விராட் கோஹ்லி பதிவில் கமெண்ட் செய்த யுவராஜ் சிங், இது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கோட்கபுரா போல் தெரிகிறது? ஹர்பஜன் நீ என்ன நினைக்கிறாய்? என கோஹ்லியை கலாய்த்துள்ளார்.

கோஹ்லி தற்போது இந்திய அணித்தலைவராக இருந்தாலும், ஆரம்ப காலத்தில் இந்திய அணியில் விளையாடி இளம் வீரர் ஆவார். அப்போது கோஹ்லிக்கு யுவராஜ் சீனியர் என்பதால், விளையாட்டாக யுவராஜ் கலாய்த்துள்ளார்.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணியில் யுவராஜ் சிங் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்