இலங்கை பயிற்சியாளராக முன்னாள் நட்சத்திரம் நியமனம்

Report Print Basu in கிரிக்கெட்

இலங்கையின் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேட்ச் பிக்சிங்கில் ஈடுப்பட்டதாக ஐசிசி-யின் குற்றச்சாட்டின் விளைவாக இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதிவியிலிருந்து மே 11ம் திகதி அவஷ்கா குணவர்த்தன நீக்கப்பட்டார்.

இந்நிலையில், மே 14ம் திகதி நடந்த இலங்கை கிரிக்கெட் ஆணையத்தின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இதில், வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸை நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வளர்ந்து வரும் அணி அடுத்த மாதம் தென் ஆபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இத்தொடரிலிருந்து இலங்கை வளர்ந்து வரும் அணியின் தலைமை பயிற்சியாளராக சமிந்த வாஸ் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்