நீதா அம்பானியும்..... மும்பை இந்தியன்ஸ் அணியும்: ஐபிஎல் முகம்

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது முறையாக ஐபிஎல் சாம்பியன் கோப்பை பெற்றுள்ளதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் அந்த அணியின் உரிமையாளர் நீதா அம்பானி.

<மும்பை அணியின் இந்த வெற்றி அன்னையர் தினத்திற்கு எனது மகன் ஆகாஷ் கொடுத்த பரிசு என பூரித்துபோயுள்ளார். இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் எனது மகன் என்னுடன் இணைந்து செயல்பட்டான்.

அதற்கு பரிசு கிடைத்துள்ளது என நெகிழ்ந்துள்ளார்.

நீதா அம்பானி ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் மட்டுமல்ல கிரிக்கெட் விளையாட்டின் தீவிர ரசிகையும் ஆவார்.

ஐபிஎல் போட்டிகளில் இவரது பங்கு மிகப்பெரியது, இவரது அணியான மும்பை இந்தியன்ஸ் தான் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக திகழ்கிறது.

சிறந்த தொழிலதிபராக இருந்தாலும், தனது அணி விளையாடும் அனைத்துப் போட்டிகளையும் தவறாமல் பார்த்துவிடும் பழக்கம் இவருக்கு இருக்கிறது.

ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆறு வருடங்கள் கேப்டனாக விளையாடியவர் சச்சின் டெண்டுல்கர்.

இவர் மொத்தம் விளையாடிய 78 போட்டிகளில் 2334 ஓட்டங்கள் குவித்துள்ளார், அதிகபட்ச ஸ்கோராக ஒருமுறை ஆட்டமிழக்காமல் சரியாக சதம் அடித்திருந்தார் சச்சின்.

சச்சின் தலைமையில் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு அமையவில்லை என்றாலும், மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் ஷர்மா தலைமையில் 4 முறை (2013, 2015, 2017, 2019) கோப்பையைவென்றுள்ளது.

இதுப்போக 2010ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து ஒருமுறை ரன்னர் அப்பாகவும் வந்திருந்தது. அந்த ஐபிஎல் காலண்டரில் சச்சின் மொத்தம் 618 ஓட்டங்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களது நூறாவது ஐபிஎல் போட்டியில் வெற்றிபெற்ற ஒரே அணி மும்பை இந்தியன்ஸ் தான்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers