டோனிக்கு அவுட்டே இல்லாமல் அவுட் கொடுக்கப்பட்டதா? சர்ச்சையை ஏற்படுத்திய ரன் அவுட்டின் வீடியோவும், விளக்கமும்

Report Print Santhan in கிரிக்கெட்

மும்பை அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் டோனியின் ரன் அவுட் தான் இப்போது சமூகவலைத்தளங்களில் பெரிய விவாதமாக சென்று கொண்டிருக்கிறது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய இறுதிப் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ரோகித் தலைமையிலான மும்பை அணியும் மோதின, இப்போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றாலும் டோனியின் ரன் அவுட் தான் இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டத்தின், 12-வது ஓவரின் 3-வது பந்தை ஹார்திக் பாண்ட்யா வீச, அதை எதிர்கொண்ட வாட்சன் லெக் திசையில் அடித்து விட்டு ஓடினார்.

அப்போது அங்கு பீல்டிங் செய்த மலிங்கா ரன் அவுட்டிற்காக த்ரோ செய்ய, அப்போது அங்கு பீல்டர் இல்லாததால், டோனி மீண்டும் இரண்டாவது ரன்னிற்கு ஓடினார்.

ஆனால் அப்போது அந்த பந்தை பிடித்த இஷான் கிஷான் அற்புதமாக ஸ்டம்பை நோக்கி எறிந்ததால், அவுட் க்ளைம் செய்யப்பட்டது. இது மூன்றாவது நடுவரிடம் கொண்டு செல்லப்பட்டது.

அப்போது இதைக் கண்ட மூன்றாவது நடுவர் அவுட் என்று கூற, மும்பை ரசிகர்கள் மைதானத்தில் துள்ளிக் குதித்தனர்.

ஆனால் ஒரு ஆங்கிள் இருந்து பார்க்கும் போது, டோனி கிரிசின் உள்ளே வந்தது போன்று தான் இருந்ததாக கூறி, சென்னை ரசிகர்கள் அது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

அதே சமயம் கிரிக்கெட் விதிப்படி பார்த்தால், Benefit of the doubt goes to batsmen என்ற ஒரு வாசகம் இருக்கிறது.

அதாவது இதுபோன்று சந்தேகம் இருக்கும் சூழலில், சரியாக கணிக்க முடியாத நிலையில், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகத்தான் நடுவர்கள் முடிவு எடுப்பார்கள். ஆனால், நேற்று டோனிக்கு எதிராக அவுட் கொடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இன்னொரு தகவலின் படி பார்த்தால், அது அவுட் என்றே கூறப்படுகிறது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் கூட இதேபோன்ற சம்பவங்களில் அவுட் தான் கொடுக்கப்பட்டுள்ளது. பந்தை ஸ்டம்பை அடிக்கும் அதே நொடியில் பேட்ஸ்மேன் கிரீஸுக்குள் நுழைந்தால், அதற்கு அவுட் தான் கொடுக்கப்படும். இதனால் டோனி அவுட் என்றும் கூறப்பட்டு வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்