ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்லும் அணிக்கு பரிசு தொகை மட்டும் எவ்வளவு தெரியுமா? அறிவிக்கப்பட்ட முழுவிபரம்

Report Print Santhan in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் வெற்றி மற்றும் தோல்வியை சந்திக்கும் அணிகளுக்கு எவ்வளவு பரிசுத் தொகை கொடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் ஒவ்வொரு ஆண்டும் கோலகலமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்தாண்டிற்கான ஐபிஎல் தொடர் துவங்கி, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இன்று ஹைதராபாத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

இதுவரை, இரு அணிகளும் தலா 3 முறை கோப்பையை வென்றுள்ளன. இறுதிப் போட்டியில் இரு அணிகளும் 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், 2-ல் மும்பையும், ஒன்றில் சென்னையும் வென்றுள்ளது.

அதனால், இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஐ.பி.எல் கோப்பையை வெல்லும் அணி மற்றும் இறுதிப் போட்டியில் தோல்வி அடையும் அணிகளுக்கு எத்தனை கோடிகள் பரிசுத்தொகை வழங்கப்படும் என்ற விவரம் வெளியாகியுள்ளது.

12-வது ஐ.பி.எல் தொடருக்கான மொத்த பரிசுத்தொகை 50 கோடி ரூபாய். அதில், 50 சதவீத தொகை அணிகளுக்கும், மீதமுள்ள தொகை வீரர்களுக்கும் வழங்கப்படும்.

கோப்பையை வெல்லும் அணிக்கு 25 கோடி ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும். இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த அணிக்கு 12.5 கோடி ரூபாய் வழங்கப்படும்.

இது மட்டுமல்லாமல், 3-வது மற்றும் 4-வது இடங்களைப் பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 10.5 கோடியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 8.5 கோடி ரூபாயும் வழங்கப்படும்.

இதுதவிர, அதிக ஓட்டங்கல் அடித்த ஆரஞ்சு கேப் மற்றும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பர்பில் கேப் வைத்திருக்கும் வீரர்களுக்கு தலா 10 லட்சமும், மிகவும் மதிப்புமிக்க வீரருக்கு 10 லட்சமும் வழங்கப்படும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers