டோனியை தடுத்து நிறுத்தப்போவது இவர்கள் தானாம்! ரோஹித் ஷர்மாவின் திட்டம்

Report Print Kabilan in கிரிக்கெட்

இன்று நடைபெற உள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டியில், டோனியை கட்டுப்படுத்த மும்பை அணித்தலைவர் ரோஹித் ஷர்மா திட்டம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.

12வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி ஹைதராபாத் நகரில் இன்று இரவு நடக்க உள்ளது. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.

சென்னை அணியின் மிகப்பெரிய பலம் என்னவென்றால் நடுவரிசையில் களமிறங்கும் அணித்தலைவர் டோனி தான். இதுவரை அவர் 11 இன்னிங்ஸில் 414 ஓட்டங்கள் குவித்துள்ளார். எனவே இறுதிப்போட்டியில் டோனியை தடுத்து நிறுத்துவதே மும்பை இந்தியன்ஸின் திட்டமாக இருக்கும்.

இதற்காக பும்ரா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகிய இரண்டு வீரர்களை மும்பை அணியில் உள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏனெனில் இந்த ஐ.பி.எல் தொடரில் பும்ராவின் பந்துவீச்சில் டோனி தடுமாறியுள்ளார். அத்துடன் பும்ராவின் பந்துவீச்சில் 3 முறை டோனி ஆட்டமிழந்துள்ளார்.

எனவே, டோனியின் பேட்டிங்கின்போது பும்ரா பந்துவீச ரோஹித் ஷர்மா திட்டம் வகுக்க வாய்ப்புள்ளது. மேலும் ஹர்திக் பாண்ட்யாவும் பந்துவீச்சு மூலம் டோனியை திணறடிப்பார் என்பதால் அவரையும் மும்பை அணி பயன்படுத்தும் என்று தெரிகிறது.

இவர்கள் இருவரும் டோனியின் ரன் வேகத்தை வெகுவாக கட்டுப்படுத்தியிருப்பதால், இன்றைய போட்டியிலும் டோனிக்கு நெருக்கடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers