இன்று ஐபிஎல் இறுதி போட்டி! சென்னை அணிக்கு இப்படியொரு கண்டமா? வெளியான புள்ளி விபரம்

Report Print Raju Raju in கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் இறுதிப்போட்டியில் கண்டம் இருப்பது கடந்த கால புள்ளி விபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

2019ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று இறுதி போட்டி நடைபெறவுள்ளது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில், சி.எஸ்.கே அணிக்கு இறுதிப்போட்டியில் கண்டம் இருப்பதாக கடந்த கால புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மும்பை அணி, நடப்பு சீசனில் குவாலிஃபையர் போட்டி உள்பட சி.எஸ்.கே-வை 3 முறை வீழ்த்தியுள்ளது.

இதுவரை நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடர்களில், மும்பை அணி 4 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி, 3 முறை கோப்பையை வென்றுள்ளது. அதில், முக்கியமான விவரம் என்னவென்றால் 2 முறை சென்னை அணியை வீழ்த்தி கோப்பை வென்றுள்ளது.

சென்னை அணி, 8 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி 3 முறை கோப்பையை வென்றுள்ளது. அதில், இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு வந்து கடந்த ஆண்டு கோப்பையை வென்றது மிகவும் சிறப்பான தருணமாக அந்த அணிக்கு அமைந்தது. 2010-ல் நடந்த இறுதிப்போட்டியில் மும்பையை வீழ்த்தியது சென்னை.

இதன் காரணமாக கடந்த காலங்களில் இறுதிப்போட்டிகளில் சென்னையை அதிகமுறை வென்றுள்ளதால், மும்பை அணியே மிகுந்த நம்பிக்கையுடன் இன்று களமிறங்கவுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers