இலங்கை கிரிக்கெட் அணியின் செயல்திறன் ஆய்வாளர் பதவியிலிருந்து சனத் ஜெயசுந்தர அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி-யின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக சனத் ஜெயசுந்தர மீது இரண்டு பிரிவுகளில் ஐசிசி குற்றம்சாட்டியுள்ளது.
அதன் விளைவாக உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் செயல்திறன் ஆய்வாளர் பதவியிலிருந்து சனத் ஜெயசுந்தர தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
வீரர்கள் தேர்வு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு லஞ்சம் வழங்க முயன்றதாக சனத் ஜெயசுந்தர மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 14 நாட்களுக்குள் சனத் ஜெயசுந்தர குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்க வேண்டும் என ஐசிசி உத்தரவிட்டுள்ளது.