முதல் பந்திலேயே அஸ்வினை போல் கேலி செய்து சிரித்த சென்னை நட்சத்திரம்.. பதறிய டெல்லி வீரர்

Report Print Basu in கிரிக்கெட்

டெல்லி அணிக்கு எதிரான இரண்டாவது பிளே ஆப் போட்டியின் போது முதல் பந்திலே சென்னை பந்து வீச்சாளர் தீபக் சஹார், தவானை மேன்காடிங் முறையில் ரன் அவுட் செய் முயன்று கேலி செய்து சிரித்தார்.

விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது பிளே ஆப் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

எனினும், இரண்டாவது பிளே ஆப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. முதல் ஓவரை சென்னை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் தீபக் சஹார் வீசினார்.

போட்டியின் முதல் பந்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருக்க, பந்து வீச ஓடி வந்த சஹார், பந்து வீசும் பக்கத்திலிருந்த டெல்லி வீரர் தவான் கிரிஸ் கோட்டை தாண்டியிருப்பதை கண்டவுடன், பஞ்சாப் வீரர் அஸ்வினை போல மேன்காட்டிங் முறையில் ரன் அவுட் செய்ய முயன்றார்.

எனினும், இதைக்கண்ட சுதாரித்த தவான் உடனே கிரிஸ் கோட்டிற்குள் செல்ல டெல்லியின் விக்கெட் தப்பியது. தவானை பார்த்து சிரித்துக்கொண்டே சாஹார் செல்ல, முதல் பந்திலேயே இப்படி ஏமாற்றிவிட்டரே என ரசிகர்கள் கடுப்படைந்தனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers