இலங்கை பயிற்சியாளர் அதிரடி நீக்கம்...இதான் காரணம்

Report Print Basu in கிரிக்கெட்

இலங்கையின் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதிவியிலிருந்து அவஷ்கா குணவர்த்தன நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் ஜக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி10 லீக் போட்டியில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுப்பட்டதாக இலங்கை முன்னாள் வீரர்களான அவஷ்கா குணவர்த்தன மற்றும் நுவன் சோய்வா மீது ஐசிசி குற்றம்சாட்டியது.

ஐசிசி-யின் குற்றச்சாட்டின் விளைவாக இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதிவியிலிருந்து அவஷ்கா குணவர்த்தனாவை நீக்குவதாக இலங்கை கிரிக்கெட் ஆணையம் அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆணையத்தின் ஊழல் தடுப்பு விதியின் கீழ், இலங்கை அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்டகாரரான அவஷ்கா குணவர்த்தன மீது ஐசிசி இரண்டு பிரிவுகளில் குற்றம்சாட்டியுள்ளது.

1999 முதல் 2006 ஆம் ஆண்டு வரை இலங்கை அணிக்காக 6 டெஸ்ட் போட்டியிலும், 61 ஒரு நாள் போட்டியிலும் விளையாடியுள்ள குணவர்த்தன, இந்தாண்டு தொடக்கத்தில் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers