சிஎஸ்கே தோற்க வேண்டும் என வேண்டிய டோனி ரசிகர்கள்... இதற்காக தான்!

Report Print Basu in கிரிக்கெட்

ஐபிஎல் முதல் பிளே ஆப் சுற்றில் மும்பை அணிக்கு எதிராக சென்னை தோற்க வேண்டும் என வேண்டியதற்கான காரணத்தை விசாகப்பட்டிண டோனி ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.

முதல் பிளே ஆப் போட்டியில் தோற்று டோனியின் சென்னை அணி விசாகப்பட்டிணத்துக்கு வரவேண்டும், டோனியின் அதிரடி ஆட்டத்தை பார்க்க ஆவலுடன் இருப்பதாக விசாகப்பட்டிண ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

விசாகப்பட்டிணம் மைதானம் டோனிக்குச் சாதகமான மைதானம். இந்த மைதானத்தில் தான் 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக 148 ரன்கள் விளாசினார். இங்கு டோனியின் அதிரடி ஆட்டத்தை இன்னொரு முறை பார்ப்பதற்காகவே இரண்டாவது பிளே ஆப் சுற்றில் சென்னை விளையாட வேண்டும் என விரும்பினோம் என தெரிவித்துள்ளனர்.

விசாகப்பட்டிண ரசிகர்களின் ஆசை நிறைவேறி நிலையில் இன்று விசாகப்பட்டிணத்தில் நடக்கும் இரண்டாவது பிளே ஆப் போட்டியில் சென்னை-டெல்லி அணிகள் மோதவுள்ளது. இதில் வெற்றிப்பெறும் அணி எதிர்வரும் 12ம் திகதி ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை அணியுடன் மோதும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்