ஹர்திக் பாண்ட்யாவை பற்றி இன்னும் தெரியவில்லை... எச்சரிக்கும் இங்கிலாந்து முன்னாள் ஆல் ரவுண்டர்

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா Match Winner ஆக இருப்பார் என்று இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ பிளின்டாப் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் தொடங்க உள்ள உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இடம்பிடித்துள்ளார். பெரும்பாலன அணிகள் ஏராளமான ஆல்-ரவுண்டர் வீரர்களை கொண்டுள்ளன.

இது அணிகளுக்கு சாதகமாக இருக்கும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் வீரர் ஆண்ட்ரூ பிளின்டாப் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘இங்கிலாந்தில் மட்டுமல்ல, உலகின் எந்த பகுதியானாலும் அணிகளுக்கு ஆல்-ரவுண்டர் மிகப்பெரிய சொத்துதான்.

ஒருநாள் போட்டியில் பந்துவீச்சாலும், பேட்டிங்காலும் அணிக்கு Match Winner ஆக இருப்பது பெரிய ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்தியா ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா மற்றும் விஜய் ஷங்கர் என மூன்று ஆல்-ரவுண்டர்களை பெற்றுள்ளது.

ஹர்திக் பாண்ட்யாவை எல்லோரும் குறைத்து மதிப்பிடுகிறார்கள். எந்தவித பதட்டமும் இல்லாமல் களத்தில் காணப்படும் அவர், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதை நாம் பார்க்கத்தான் போகிறோம். அவர் மிகச் சிறந்த Match Winner’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்