டோனியிடம் இருக்கும் அந்த திறமை கோஹ்லிடம் இல்லை! பயிற்சியாளர் கருத்து

Report Print Kabilan in கிரிக்கெட்

மகேந்திர சிங் டோனியைப் போல போட்டியை கணிக்கும் திறமை, விராட் கோஹ்லிடம் இல்லை என்று டோனியின் சிறுவயது பயிற்சியாளர் கேஷாப் ரஞ்சன் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள அண்டூலில், எம்.எஸ்.டோனி கிரிக்கெட் அகாடமியில் கோடைகால பயிற்சி முகாம் நேற்றைய தினம் தொடங்கப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டோனியின் சிறுவயது பயிற்சியாளர் கேஷாப் ரஞ்சன் பானர்ஜி, டோனி குறித்து புகழ்ந்து தள்ளினார். அவர் கூறுகையில்,

‘போட்டியை கணித்து அதன்படி செயல்படுவதில் டோனிக்கு நிகர் யாருமில்லை. தற்போதைய இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு அந்த திறமை இல்லை. அதனால், அவர் டோனியிடம் ஆலோசனை கேட்கும் நிலைமை இருக்கிறது.

டோனி, அணியில் இல்லை என்றால் விராட் கோஹ்லிக்கு வேறு யாரும் உதவ முடியாது. டோனியின் ஆலோசனை மட்டுமே விராட் கோஹ்லிக்கு உதவும். நான்காவது வரிசையில் இறங்கும் வீரர் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. என்னைப் பொறுத்தவரை அந்த இடத்தில் டோனி தான் களமிறங்க வேண்டும்.

AP

அவர் 4வது வீரராக களமிறங்கினால் அடுத்து வருபவர்கள், பதட்டம் இல்லாமல் விளையாட முடியும். அவர் ஓய்வு பெறுவது பற்றி கேட்கிறார்கள். அவரது உடல் தகுதியை நீங்கள் பார்க்கவில்லையா? உடல் தகுதி தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்.

அதுபற்றி நானோ, அவர் மனைவியோ, ஏன் அவர் தந்தையோ கூட கூற முடியாது. ரிஷாப் பண்ட்டுக்கு உலகக் கோப்பையில் வாய்ப்பளிக்காதது பற்றி கேட்கிறார்கள். அவருக்கு இன்னும் வயதிருக்கிறது. வாய்ப்பு கண்டிப்பாக வரும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்