டோனியின் சென்னை படையை தோற்கடிப்போம்... எச்சரிக்கும் டெல்லி அணியின் கேப்டன்

Report Print Santhan in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரின் ஹைதரபாத் அணிக்கெதிரான வெற்றிக்கு பின், சென்னையை அணியையும் வீழ்த்துவோம் என்று டெல்லி அணியின் தலைவர் ஸ்ரேயஸ் அய்யர் கூறியுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.

முதல் பிளே ஆப் சுற்றில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

மும்பை அணியுடன் ஏற்பட்ட தோல்வியால், ஹைதராபாத் அணியுடன் சென்னை இன்று பலப்பரீட்சை நடத்துகிறது.

இதில் வெற்றி பெறும் அணியே ஞாயிற்றுக் கிழமை இறுதிப் போட்டியில் மும்பை அணியுடன் மோதும்.

இந்நிலையில் இரண்டாவது பிளே ஆப் சுற்றில் ஹைதராபாத் அணியை வீழ்த்திய பின்பு டெல்லி அணியின் தலைவர் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில், கடந்த இரண்டு வருடங்களாக நான் தகுதிச்சுற்றுகளை அமர்ந்து வேடிக்கை மட்டுமே பார்த்தேன்.

அணியில் இருக்கும் அனைவரது முகத்திலும் மகிழ்ச்சியை காண முடிகிறது. ஹைதராபாத்தை வென்றதுபோல சென்னைக்கு எதிராகவும் வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அடுத்த போட்டியிலும் முன்னேறிச்செல்வோம். ஆனால் சென்னை அணி சிறப்பாக விளையாடி வந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

மேலும் அந்தணியின் துவக்க வீரரான ப்ரித்வி ஷா சென்னை அணியை வீழ்த்துவதற்கு வியுகங்கள் பல இருப்பதாகவும், அதை போட்டியில் செயல்படுத்துவோம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்