உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இலங்கை அணி நாளை இங்கிலாந்து பயணம்: வெளியான அறிவிப்பு

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் தங்கள் நாட்டில் பயிற்சியை முடித்துவிட்ட நிலையில் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க நாளை புறப்படுகிறார்கள்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வரும் 30ஆம் திகதி தொடங்கி ஜூலை மாதம் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் இறுதி பயிற்சியை முடித்துள்ள அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் வரும் 7ஆம் திகதி இங்கிலாந்துக்கு புறப்படுகின்றனர்.

இது தொடர்பான தகவல் இலங்கை கிரிக்கெட் அணியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு தொடர்ந்து அவர்கள் பயிற்சி மேற்கொள்வார்கள் என தெரிகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers