தினேஷ் கார்த்திக்கை வெளிப்படையாக விமர்சித்தார் ரஸல்.. அணிக்குள் ஒற்றுமையில்லை! கொல்கத்தா அணி பயிற்சியாளர் குமுறல்

Report Print Kabilan in கிரிக்கெட்

அணிக்குள்ளும், களத்திலும் வீரர்கள் மத்தியில் ஒற்றுமைக் குறைவாக இருந்தது உண்மை தான் என்று கொல்கத்தா அணியின் துணை பயிற்சியாளர் சைமன் கேடிச் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பையில் நேற்று நடந்த ஐ.பி.எல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. இந்த தோல்வி குறித்து கொல்கத்தா அணியின் துணை பயிற்சியாளர் சைமன் கேடிச் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘வீரர்களுக்கு இடையேயும், களத்திலும் ஒருவிதமான பதற்றமான சூழல் இருந்தது. ஒற்றுமைக் குறைவும் இருந்தது. இதை மறைக்க முடியாது. இது கடந்த போட்டியில் இருந்ததை அனைவரும் நன்றாகத் தெரிந்ததுதானே.

தொடக்கத்தில் சில போட்டிகளில் நாங்கள் வெற்றிப்பின் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தோம். அந்த தோல்விக்கான காரணத்தை அனைவரும் சேர்ந்து கண்டறிந்து பேசி இருக்க வேண்டும். ஐ.பி.எல் போட்டித் தொடரில் அணி வீரர்களுக்கு இடையே மிகவும் முக்கியமானது உற்சாகம், உத்வேகம், ஒற்றுமை. இவை அனைத்தும் கே.கே.ஆர் அணியில் இருக்கிறது என்பதில் பெருமைப்படுகிறேன்.

ஆனால், தொடர்ந்து நாங்கள் சந்தித்த 6 தோல்விகளுக்குப்பின் அணி வீரர்கள் மத்தியில் உற்சாகம், உத்வேகத்தில் மாற்றம் ஏற்பட்டது. அதிலும் ஆண்ட்ரூ ரஸல் வெளிப்படையாக அணி நிர்வாகத்தையும், கேப்டன் தினேஷ் கார்த்திக்கையும் விமர்சித்தார். தன்னை 3வது வீரராக களமிறக்க மறுக்கிறார்கள் என்று கூறியது அணியின் ஆரோக்கியமான நட்புறவை, சூழலை பாதித்தது என்பது உண்மைதான்.

இதனால் சில போட்டிகளுக்கு களத்தில் அணியில் உள்ள இரு வீரர்களுக்கு இடையே ஒற்றுமையின்மை இருந்ததை ஒப்புக்கொள்கிறேன். ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு அணிகளிடம் எங்கள் சொந்த மண்ணில் நாங்கள் தோற்றிருக்கக்கூடாது.

அந்த தோல்வி எங்களை பிளே-ஆப் சுற்றுக்கு செல்வதில் இருந்து தடுத்துவிட்டது. அந்த இரு வாய்ப்புகளையும் தவறவிட்டோம். சிறப்பாக ஐ.பி.எல் போட்டியைத் தொடங்கி, நடுப்பகுதியில் நாங்கள் கோட்டை விட்டுவிட்டோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers