ஐபிஎல் தோல்வியில் இருந்து மீண்டு வருவது சாதாரண விடயம் அல்ல! விராட் கோஹ்லி

Report Print Kabilan in கிரிக்கெட்

ஐ.பி.எல் போட்டியில் முதல் 6 ஆட்டங்களில் தொடர் தோல்வி கண்டு, பின்னர் மீண்டு வருவது சாதாரண விடயம் அல்ல என்று பெங்களூரு அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஐ.பி.எல் டி20 தொடரில் தனது கடைசி போட்டியில், ஹைதராபாத் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு செல்ல முடியாத போதிலும், அந்த அணிக்கு ஒரு ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

இந்நிலையில், இந்த தொடரில் விளையாடியது குறித்து அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில்,

‘இந்த ஐ.பி.எல் சீசனின் முதல் பாதியில் நாங்கள் சரியாக விளையாடவில்லை. இதனால் தொடர்ந்து 6 தோல்விகளைப் பெற்றோம். பின்னர் 2வது பாதியில் சுதாரித்து ஆடினோம். இதன்மூலம் இந்த சீசனில் நாங்கள் மோசமாக விளையாடவில்லை என்ற உணர்வு வந்துள்ளது.

AFP

முதல் 6 போட்டிகளில் தொடர்ந்து தோல்வி கண்டு, பின்னர் மீண்டு வருவது என்பது மிகவும் கடினமான காரியம். இந்த சீசனில் பல விடயங்களை நாங்கள் கற்று உணர்ந்தோம். நாங்கள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனாலும், எங்களது செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

புள்ளிகள் பட்டியலில் நாங்கள் விரும்பிய இடத்தை எங்களால் பெற முடியவில்லை. கடைசி 8 போட்டிகளில் 5யில் வெற்றி பெற்றோம். ஒரு போட்டி மழையால் தடைபட்டது. இது எங்களுக்கு ஓரளவுக்கு பெருமை தருகிறது. கடைசி ஆட்டத்தில் ஹெட்மையரும், குர்கீரத் சிங் மானும் அபாரமாக விளையாடி அரை சதமடித்தனர்.

எங்களுக்கு உற்சாகமளித்த பெங்களூரு ரசிகர்களுக்கு எங்கள் நன்றி. ஒவ்வொரு ஆண்டும் எங்களுக்கு அதிக உற்சாகத்தை ரசிகர்கள் அளித்து வருகின்றனர். இதை மறக்கவே முடியாது. அடுத்த ஆண்டில் அதிக அளவு முன்னேறிய ஆட்டத்துடன் நாங்கள் வருவோம்.

நீங்கள் விரும்பிய முடிவுகளை நாங்கள் தருவோம். அதிக அளவில் மைதானத்திற்கு வந்து உற்சாகமளித்த ரசிகர்களுக்கு நன்றி. ஐ.பி.எல் போட்டியிலேயே சிறந்த ரசிகர்கள் நீங்கள் தான்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...