தமிழக வீரர் அஸ்வினை விட மிகவும் மோசமாக அவுட் செய்த இங்கிலாந்து வீரர் வீடியோ... திட்டி தீர்க்கும் நெட்டீசன்கள்

Report Print Santhan in கிரிக்கெட்

அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் செய்த ஸ்டம்பிங் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு இங்கிலாந்தில் இன்னும் 3 வாரங்களில் நடைபெறவுள்ளது.

இதற்கான வீரர்களின் அறிவிப்பை அனைத்து அணிகளும் அறிவித்துவிட்டன, இந்த வீரர்களின் அறிவிப்பை வைத்து பார்த்த போது பலம் வாய்ந்த அணிகளாக இங்கிலாந்து மற்றும் இந்தியா மட்டுமே என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உலகக்கோப்பை துவங்குவதற்கு முன் இங்கிலாந்து அணி, அயர்லாந்துடன் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி சார்பில் விக்கெட் கீப்பராக பென் போக்ஸ் அறிமுக வீரராக இறக்கப்பட்டார்.

மைதானத்தில் ஈரப்பதம் இருந்ததால் போட்டி 45 ஓவராக குறைக்கப்பட்டது. அதன் படி முதலில் ஆடிய அயர்லாந்து அணி 43.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ஓட்டங்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 42 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இருப்பினும் இப்போட்டியில் விக்கெட் கீப்பரான பென் போக்ஸ் அயர்லாந்து வீரர் ஆண்டி பால்பிரினியை ஸ்டம்பிங் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதில் 25-வது ஓவரி டென்லி வீசினார், இதை எதிர்கொண்ட ஆண்டி பால்பிரினி அடித்து ஆட முற்பட, ஆனால் பந்தானது பேட்டில் படாமல் விக்கெட் கீப்பர் கையில் சென்றது. கீப்பர் உடனே ஸ்டம்பிங் செய்யாமல், பேட்ஸ்மேன் கால்களை உயர்த்தும் வரை காத்திருந்து ஸ்டெம்பிங் செய்தார்.

இது நல்ல யோசனை தான் என்றாலும், இது ஒரு ஜெண்டில் மேன் கிரிக்கெட் கிடையாது. இதற்கு அஸ்வின் செய்த மன்கவுட் முறை அவுட் கூட பரவாயில்லை என்று கிரிக்கெட் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers