ஆம்! வீரர்களை திட்டினேன்.. அவர்கள் நடந்துகொண்ட முறை சரியில்லை: வெளிப்படையாக கூறிய தினேஷ் கார்த்திக்

Report Print Kabilan in கிரிக்கெட்

பந்துவீச்சாளர்களும், பீல்டர்களும் செய்தது சரியில்லை என்பதால் தான் அவர்களை திட்டியதாக கொல்கத்தா அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

மொஹாலியில் நேற்று நடந்த ஐ.பி.எல் லீக் போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி துடுப்பாட்டம் செய்தபோது, முதலாவது Time-out வழங்கப்பட்டது.

அப்போது கொல்கத்தா அணித்தலைவர் தினேஷ் கார்த்திக், தனது அணி வீரர்களை அழைத்து கோபமாக பேசினார். அதிலும் குறிப்பாக சுனில் நரேன், உத்தப்பா ஆகியோரிடம் கடுமையாக பேசிவிட்டு பீல்டிங்குக்கு அனுப்பினார்.

போட்டி முடிந்ததும் தினேஷ் கார்த்திக் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது களத்தில் வீரர்களை திட்டியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக் கூறுகையில்,

‘ஆம், நான் வீரர்களிடம் கடுமையாகத்தான் பேசினேன். கடந்த சில நாட்களாக கடுமையாகத்தான் நடக்கிறார்கள். பந்துவீச்சாளர்களும், ஃபீல்டர்களும் நடந்து கொண்ட முறை சரியில்லை, எனக்கு பிடிக்கவும் இல்லை.

அந்த நேரத்தில் வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிய நான் நினைத்து அவ்வாறு பேசினேன். நான் கோபப்பட்டு பேசியதை யாரும் அரிதாகவே பார்த்திருப்பார்கள். எங்கள் வீரர்களிடம் இருந்து நல்லவிதமான உழைப்பு கிடைக்க, முடிவு கிடைக்க கோபம் அவசியம் என்றால் அதையும் செய்ய வேண்டியது தான்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers