தனிப்பட்ட வீரர்களை நம்பி மும்பை அணி இல்லை! ரோஹித் ஷர்மா அதிரடி

Report Print Kabilan in கிரிக்கெட்

மும்பை அணி தனிப்பட்ட வீரர்களை நம்பி இல்லை என்றும், அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடுவதே தங்களது தனித்துவம் என்றும் அந்த அணித்தலைவர் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

வான்கடே மைதானத்தில் நடந்த ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ‘சூப்பர் ஓவர்’ முறையில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் ‘பிளே-ஆப்’ சுற்றிலும் நுழைந்தது.

இந்நிலையில் தமது அணியின் நிலை குறித்து கேப்டன் ரோஹித் ஷர்மா கூறுகையில், ‘போதுமான ஓட்டங்கள் குவித்து, அதன்மூலம் அனுபவம் இல்லாத துடுப்பாட்ட வரிசையை கொண்ட ஹைதராபாத் அணிக்கு நெருக்கடி கொடுத்து மடக்க வேண்டும் என்ற நோக்குடன், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றதும் முதலில் துடுப்பட்டத்தை தெரிவு செய்தேன்.

எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுவார்கள் என்பதை அறிவேன். சென்னை அணிக்கு எதிராக இதே மைதானத்தில் 170 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்து வெற்றி பெற்றோம். இந்த தொடரில் நாங்கள் கடினமாக உழைத்திருக்கிறோம். அதற்குரிய பலனை (பிளே-ஆப் சுற்று) அடைந்துள்ளோம்.

ஒரு ஆட்டம் மீதம் வைத்து ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டியிருப்பது நல்ல அறிகுறியாகும். பல வீரர்கள் பொறுப்பு எடுத்துக்கொண்டு விளையாடி அணியை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறார்கள். எங்களது அணியை பொறுத்தவரை, ஒரு சில வீரர்களை மட்டும் நாங்கள் சார்ந்து இல்லை.

தனிப்பட்ட வீரர்களால் ஓரிரு ஆட்டங்களில் மட்டுமே வெற்றி தேடித்தர முடியும். ஆனால் கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்பினால், அனைவரும் ஒரு சேர தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும்.

இது தான் தற்போதைய மும்பை அணியின் தனித்துவமாகும். ஒவ்வொருவரும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றிக்கு உதவிட வேண்டும் என்பதே எங்களது விருப்பமாகும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...