கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக்..! அபார வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Report Print Kabilan in கிரிக்கெட்

நேற்று நடந்த ஐ.பி.எல் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி மொஹாலியில் நேற்று நடந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல்-ராகுல் இருவரும் களமிறங்கினர். ராகுல் 2 ஓட்டங்களிலும், கெய்ல் 14 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த மயங்க் அகர்வால் மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரும் அதிரடியில் மிரட்டினர்.

அணியின் ஸ்கோர் 91 ஆக உயர்ந்தபோது பூரன் 27 பந்துகளில் 48 ஓட்டங்கள் விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மயங்க் அகர்வால் 36 ஓட்டங்களில் அவுட் ஆனார். இந்நிலையில் களமிறங்கிய சாம் குர்ரன் எதிரணியினரின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். அவர் 24 பந்துகளில் 55 ஓட்டங்கள் எடுத்தார்.

Akhilesh kumar

இதன்மூலம் பஞ்சாப் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 183 ஓட்டங்கள் குவித்தது. சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கொல்கத்தா அணி களமிறங்கியது.

AFP

தொடக்க வீரர்களான சுப்மான் கில் மற்றும் கிறிஸ் லின் இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். கிறிஸ் லின் 22 பந்துகளில் 3 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த உத்தப்பா 14 பந்துகளில் 22 ஓட்டங்கள் விளாசி வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய ரஸல் 14 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 24 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடியில் மிரட்டினார். அவர் 9 பந்துகளில் ஒரு சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 21 ஓட்டங்கள் விளாசினார். இதற்கிடையில் சுப்மான் கில் அரைசதம் கடந்தார். கொல்கத்தா அணி 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers