'பாகிஸ்தானின் ஜெர்சியை போலவே உள்ளது'- ஜெர்சியை மாற்றியது வங்கதேச அணி

Report Print Abisha in கிரிக்கெட்

பாகிஸ்தான் ஜெர்சியை போலவே வங்கதேசஅணியின் ஜெர்சியும் உள்ளது என்ற விமர்சனம் எழுந்ததால் அதன் ஜெர்சியை மாற்றி அமைத்துள்ளது வங்கதேசஅணி

உலககோப்பை போட்டிக்கான ஜெர்சியை வங்கதேஷ அணி அறிமுகம் செய்திருந்தது.

அந்த நாட்டின் கொடியை போன்றே எப்போதும் அந்நாட்டு கிரிக்கெட் அணி ஜெர்சியில் பச்சை, சிவப்பு நிறங்கள் இருக்கும்.

தற்போது,அறிமுகம் செய்யப்பட்ட ஜெர்சியில் சிவப்பு நிறம் இடம்பெறவேயில்லை.

மேலும் அது பாகிஸ்தானின் ஜெர்சியை போலவே இருப்பதாகவும் ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில் வங்கதேச அணி ஜெர்சியை மாற்றி உள்ளது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஜெர்சியில் சிவப்பு நிறம் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்