ஐபிஎல் 2019... பிளே ஆப் சுற்றுக்கு செல்ல எந்தெந்த அணிக்கு வாய்ப்புகள் இருக்கிறது? இதோ முழு புள்ளி விவரம்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டதால், அடுத்த இரண்டு அணிகள் யார் என்பதில் தான் இப்போது பரபரப்பாக போட்டி நடைபெற்று வருகிறது.

அதன் படி பார்த்தால், எந்த அணிகள் எப்படி வெற்றி பெற்றால் புள்ளி விவரத்தின் அடிப்படையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பதை பார்ப்போம்.

மும்பை இந்தியன்ஸ்

ரோஹித் சர்மா தலையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 12 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்தில் உள்ளது,

0.347 என்று நல்ல நிகர ரன்ரேட்டில் இருக்கும் மும்பை அணிக்கு இரு போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில், அதில் ஒரு ஆட்டத்தில் வென்றால்கூட ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

ஆனால், சன்ரைசர்ஸ், கேகேஆர் ஆகிய இரு அணிகளும் வலிமையானவை என்பதால், எளிதாக வெற்றி கிடைக்காது. ஆனாலும் ப்ளே-ஆப் சுற்றுக்குச் செல்ல மும்பை அணிக்கு ஒரு வெற்றி இருந்தாலே போதுமானது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

துவக்கத்தில் வெற்றியோடு துவங்கிய ஹைதராபாத் அணி, அதன் பின் அடுத்தடுத்த தோல்விகளால் புள்ளிப்பட்டியலில் கீழே தள்ளப்பட்டது.

இதுவரை 12 போட்டிகளில் 6 ஆட்டங்களில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் உள்ளது. ப்ளே-ஆப் சுற்றுக்குள் செல்ல அடுத்துவரும் 2 போட்டிகளையும் சன்ரைசர்ஸ் வெல்வது கட்டாயமாகும்.

ஒரு போட்டி மும்பை அணியுடனும், மற்றொரு போட்டி ஆர்சிபி அணியுடனும் இருக்கிறது. இதில் ஆர்சிபி அணியுடன் வென்றுவிடலாம்.

ஆனால் மும்பை அணியுடனான ஆட்டம் கடினமாக இருக்கும். சன்ரைசர்ஸ் அணி 14 புள்ளிகள் பெற்றால்கூட நிகர ரன்ரேட் அடிப்படையில் 0.709 சிறப்பாக இருப்பதால், ப்ளே-ஆப்சுற்றுக்குள் செல்ல வாய்ப்பு உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் அப்படி தான், துவக்க போட்டிகளில் ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. இதனால் இந்த அணி முதல் ஆளாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் என்று எதிர்பார்த்த போது, அடுத்தடுத்து தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.

12 போட்டிகளில் 5 வெற்றி என 10 புள்ளிகளுடன் இருக்கும் கொல்கத்தா, 14 புள்ளிகளுடனும், நல்ல ரன்ரேட் அடிப்படையிலும் வென்றால்மட்டுமே ப்ளே-ஆப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்பு உண்டு.

கேகேஆர் அணியைப் பொறுத்தவரை வாய்ப்பு மட்டுமே இருக்கிறதே தவிர 14 புள்ளிகள் பெற்றாலும் ப்ளேஆப் சுற்று வாய்ப்பு கிடைக்கும் என்று ஊறுதியாகக் கூற முடியாது.

ஏனெனில், சன்ரைசர்ஸ், மும்பை அணிகளின் நிகர ரன்ரேட்டைக் காட்டிலும் கேகேஆர் ரன்ரேட் மிகவும் குறைவாக இருக்கிறது. அதற்கு மும்பை, பஞ்சாப் அணிகளை நல்ல ரன்ரேட்டில் தோற்கடித்தால் மட்டுமே வாய்ப்பு பற்றி பேச முடியும்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகளுடன் உள்ளது. இன்னும் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மட்டும் ஒரு போட்டி இருக்கிறது. இந்த ஆட்டத்தில் வென்றால் கூட ப்ளே-ஆஃப் சுற்றை உறுதி செய்வது கடினம்தான். அதுமட்டுமல்லாம், கேகேஆர் அணியும், பஞ்சாப் அணியும் தங்களின் இரு ஆட்டங்களிலும் தோல்வி அடைய வேண்டும், டெல்லி அணிக்கு எதிராக ராஜஸ்தான் கண்டிப்பாக நல்ல ரன் ரேட்டில் வென்றால் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு வர முடியும் என்பதால், ராஜஸ்தான் அணியின் நிலை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றே கூறலாம்.

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி

தமிழக வீரரான அஸ்வின் தலைமையிலான கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 10 புள்ளிகளுடன் இருக்கிறது. அடுத்துவரும் 2 போட்டிகளில் வென்று, ரன்ரேட்டை அதிகப்படுத்த வேண்டியது அவசியமாகும். அதுமட்டுமல்லாமல் சன்ரைசர்ஸ் அணி அடுத்துவரும் 2 ஆட்டங்களிலும் தோற்று, டெல்லி அணியை ராஜஸ்தான் அணி வீழ்த்தினால், பஞ்சாப் அணிக்கு ப்ளேஆஃப் வாய்ப்பு உண்டு.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...