இந்திய கிரிக்கெட் அணியின் சுற்றுப்பயணத்தில் மாற்றம்: பிசிசிஐ-ன் கோரிக்கையை ஏற்றது வெஸ்ட் இண்டீஸ்

Report Print Abisha in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்-க்கு செல்ல இருந்த சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்சில் 30ஆம் திகதி முதல், ஜூலை 14ஆம் திகதி வரை உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.

இந்த தொடர் முடிந்ததும், இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த திட்டத்தில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பாக, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. இந்த கோரிக்கையை வெஸ்ட் இண்டீஸ் கிரிகெட்வாரியமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

மேலம், இந்த சுற்றுபயணம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என கூறப்படுகின்றது.

இந்த சுற்றுப்பயணத்தில் 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளுடன் டி20 போட்டிகளும் இடம்பெற உள்ளன. அத்துடன் மூன்று நாட்கள் கொண்ட ஒரு பயிற்சி போட்டியையும் சேர்க்கும்படி பிசிசிஐ கூறியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers