இந்த நேரத்தில் நான் செல்வது மனதிற்கு கஷ்டமாக உள்ளது! ஐபிஎல்-யில் இருந்து வெளியேறும் மற்றொரு அவுஸ்திரேலிய வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

அணி முக்கியமான கட்டத்தில் இருக்கும்போது நான் சொந்த நாட்டுக்கு திரும்புவது வருத்தமாக இருக்கிறது என ராஜஸ்தான் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான்-பெங்களூரு அணிகள் மோதின. மழையின் குறுக்கீடு இருந்ததால் 5 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. ஆனாலும், ராஜஸ்தான் அணி துடுப்பாட்டம் செய்துகொண்டிருந்தபோது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது.

இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் காரணமாக பெங்களூரு அணி முதல் அணியாக ஐ.பி.எல் தொடரை விட்டு வெளியேறியது. இந்நிலையில் ராஜஸ்தான் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில்,

‘ராஜஸ்தான் அணியில் நான் இணைந்தபோது, எங்கள் அணி வரிசையாக தோல்வியை கண்டு கொண்டிருந்தது. அதன் பின்னர் குறைந்த போட்டிகள் உள்ள நிலையில், நான் கேப்டன் பொறுப்பினை ஏற்றேன்.

BCCI

3 போட்டிகளில் 2ல் வென்றோம். அந்த இரண்டு போட்டிகளிலும் எனது பங்களிப்பு இருந்தது மகிழ்ச்சி. மேலும், தொடரின் இறுதி கட்டத்தில் இருக்கும்போது நான் அணியில் இருந்து விலக உள்ளேன்.

இருப்பினும் எங்களது அணி நிச்சயம் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். எல்லாம் நன்றாக போய்க்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் நான் செல்வது மனதிற்கு கஷ்டமாக உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers