பஞ்சாப் அணியை கதிகலங்க வைத்த வார்னர்... புள்ளிப்பட்டியலில் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட பஞ்சாப்

Report Print Santhan in கிரிக்கெட்

ஹைதரபாத் அணிக்கெதிரான போட்டியில் பஞ்சாப் அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால், புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

அதன் படி நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

இதைத் தொடர்ந்து ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னர், விருத்திமான் சகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அந்தணி பவர்பிளேயில் 75 ஓட்டங்கள் குவித்தது.

இதில் ஆட்டத்தின் 7-வது ஓவரில் 2-வது பந்தில் சகா 13 பந்தில் 28 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து மணிஷ் பாண்டே களம் இறங்கினார். மறுமுனையில் டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

16-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் மணிஷ் பாண்டே 36 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதே ஓவரில் கடைசி பந்தில் வார்னர் 56 பந்தில் 81 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். வார்னர் ஆட்டமிழக்கும்போது ஹைதராபாத் 16 ஓவரில் 163 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அதன் பின் -வது விக்கெட்டுக்கு முகமது நபி உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். நபி 10 பந்தில் 20 ஓட்டங்களும், கேன் வில்லியம்சன் 7 பந்தில் 14 ஓட்டங்களும் அடித்து ஆட்டமிழந்தனர். கடைசி நான்கு ஓவர்களில் 49 ஓட்டங்கள் அடிக்க ஹைதராபாத் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 212 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் 213 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணி நிர்ணைக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 167 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இதனால் ஹைதராபாத் அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி தரப்பில் அதிக பட்சமாக லோகேஷ் ராகுல் அதிரடியாக விளையாடி 79 ஓட்டங்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ற ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர்.

ஹைதராபாத் அணி பந்து வீச்சாளர்கள் தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டும், அகமது 3 விக்கெட்டும் , சந்தீர் சர்மா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி 12 போட்டிகளில் 6 வெற்றி 6 தோல்வி என 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், பஞ்சாப் அணி 12 போட்டிகளில் 5 வெற்றி 7 தோல்வி என 10 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளது.
மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...