டெல்லி அணியின் மிரட்டல் பந்துவீச்சில் சுருண்ட ஐதராபாத் அணி!

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் 30வது லீக் போட்டியானது டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையில் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை குவித்தது.

டெல்லி அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயஸ் ஐயர் 45 ரன்களும், அதிரடியாக விளையாடிய கோலின் மன்ரோ 40 ரன்களும் குவித்திருந்தனர்.

ஐதராபாத் அணி சார்பில் கலீல் அகமது 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும், அபிஷேக் ஷர்மா மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து களத்தில் இறங்கிய ஐதராபாத் அணியின் துவக்க ஆட்டக்கார்கள் ஆரம்பத்திலே, பந்தை எல்லைக்கோட்டிற்கு அனுப்ப திணற ஆரம்பித்தனர்.

அதேசமயம் முதல் விக்கெட்டை வீழ்த்த டெல்லி அணியும் மிகுந்த சிரமப்பட்டது. ஐதராபாத் அணி 72 ரன்களை சேர்ந்திருந்த போது முதல் விக்கெட்டாக ஜானி பேர்ஸ்டோ 41 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற, 18.5 பந்துகளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஐதராபாத் அணி தோல்வியடைந்தது.

டெல்லி அணியில் அதிகபட்சமாக ககிசோ ரபாடா 4 விக்கெட்டுகளும், கிறிஸ் மோரிஸ், கீமோ பால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். டெல்லி அணி இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முனனேறியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்